Jaffna

ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் தரமும் சுவையும் கோடி | Jaffna Sesame Oil Extraction

நல்லெண்ணெய் என்பது எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும். இது இலங்கை நாட்டில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் பகுதியில் செய்யப்படும் எண்ணை மிகவும் தரமும் சுத்தமும் உண்மைத் தன்மையும் கொண்டதாகும்.

இது பழமையான முறையில் செக்கில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. என்பது குறிப்பிடப்படுவது யாதெனில் இலுப்பை மரத்தால் ஆக்கப்பட்ட உரல் போன்ற பெரிய பகுதி கொட்டு என அழைக்கப்படும். அதிலிருந்து சரி செல்லம் பகுதியில் மாடுகள் அவற்றை இழுத்து செல்வதனால் நடுவில் உள்ள பகுதி மீண்டும் மீண்டும் அரைந்து உருவாகும். ஆனால் இப்போது மாட்டிற்கு பதிலாக லேண்ட் மாஸ்டர் பயன்படுத்தப்படுகின்றது. ஏனையவை யாவும் பழைய முறையிலேயே உள்ளன.

ஆரம்பத்தில் 500 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் சிறிதளவில் சேர்க்கப் படும். ஒரு தடவையில் அந்த கொட்டு எனக் குறிப்பிடப்படும் பகுதியில் 20கிலோ எள்ளு வரை இடக் கூடியதாக இருக்கும்.

தாழியில் எண்ணை திரள்வது போல எண்ணை உண்டாகும் காட்சி பார்ப்பதற்கு வியப்பானது அமைந்திருக்கும். இதன் பெயரே நல் லெண்ணெய் என்பதிலிருந்து எண்ணைகளில் மிகவும் நல்லது என்பதே கருத்தாகும். இவனை சாப்பாட்டு களில் பொரியல் வகைகள் வகைகள் உணவுகளை தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இருப்பினும் குறிப்பாக மகப்பேறு அடைந்திருக்கும் பெண்களுக்கும், பூப்பெய்தல் அடைந்திருக்கும் பருவப் பெண்களுக்கும் உணவுகள் தயாரித்து கொடுப்பதற்கு மிகவும் சிறந்த எண்ணெய் ஆகும். இது விட்டமின் இ நிரம்பப் பெற்றது வெளிநாடுகளில் எள்ளைப் பயன்படுத்தி எள்ளு மாவில் செய்யும் எள்ளு பாகங்களும் எள்ளு உருண்டைகளும் விற்றமின் E நிறைந்த சத்து மிக்க உணவுகள் ஆகும்.

நாட்டின் எப்பகுதியில் இருப்பவருக்கும் ஆனைக்கோட்டை நல்லெண்ணை என்று கூறும் போதும் அது ஒரு விசேடமானதே. நீங்கள் எண்ணை செய்யும் பொறிமுறையை பார்க்க வேண்டுமானால், அல்லது சுத்தமான எண்ணையை வாங்க வேண்டுமானால் செல்ல வேண்டிய ஒரே இடம் ஆனைக்கோட்டை ஆகும். பண்டத்தரிப்பு பகுதியிலும் இது சிறிதளவில் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் ஆனைக்கோட்டையில் 15 20 குடும்பங்கள் ஈறாக சிறு கைத்தொழிலுக்கு இவற்றை செய்து வருகின்றனர்.

இலங்கை நாட்டில் நடக்கும் சிறு கைத்தொழில் ஒன்றை அறிய வேண்டுமானால் நீங்கள் இந்த இடத்திற்கு சென்று இவற்றை பார்த்து மகிழலாம்.