Jaffna

Sivapoomi சிவபூமி அருங்காட்சியகம்

சிவபூமி அருங்காட்சியகம் கைதடி – நாவற்குழி வீதியில் திருவாசக அரண்மனையின் முன்னாக அமைந்துள்ளது.இது 2020 இலேயே பூ ர்த்தியாக்கப்பட்டு திறந்து நல்லைஆதீன முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. அதன் உட்பகுதி 16 பரப்பு காணியில் அமைந்துள்ளது.முற்பகுதியில் யாழ்ப்பாண, வன்னிப்பெருநில மன்னர்களின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் சேர்ந்த நீர் அலங்காரமும் அழகிற்கு அழகூட்டுவதாக உள்ளது.இங்குள்ள கட்டடம் மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது.முதலாவது தளத்தில் சவாரி வண்டில்,திருக்கை வண்டில்,1950களில் பயன்படுத்தப்பட்ட கார் என முன்னைய போக்குவரத்து சாதனங்கள் முன்னைய காலநாணயங்கள், பழைய புகைப்படங்கள், அரவிவெட்டுசாதனங்கள் என்பவற்றைக் காணலாம்.இரண்டாவது தளத்தில் பாவலர்கள், பண்டிதர்கள், பாடசாலை நிறுவனர்கள், சமய பெரியார்கள் என்போரின் புகைப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்தில் யாழ் நுண்கலைப்பீட மாணவர்களின் சித்திரங்கள்,ஓவியங்கள் என்பவற்றுடன் 1800ம் ஆண்டு வெளிவந்த யாழ்ப்பாண முதல் பத்திரிகையின் முதல்நாள் முதல் பக்கம் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனப் பார்வையிடுவதற்கு பெரியவர்களிற்கு ரூ 100 உம் மனவர்களிற்கு ரூ 50 உம் கட்டணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் எல்லா நாட்களிலும் சென்று பார்வையிடக் கூடியதாக இருக்கும்.காலை 9.00 மணியிலிருந்து பி.ப 5.30 மணிவரை இதனைப் பார்வையிடலாம்.இதனை சென்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களே தமது சிவபூமி அறக்கட்டளை மூலம் முன்னின்று செயற்படுத்தியவர் ஆவார்.ஆனால் அருங்காட்சியகம் என்று கூறுவதற்கு இங்கு காட்சிப்படுத்தயிருக்கும் பொருட்கள் குறைவாகவே உள்ளன.மேலும் இதனை பல பாரம்பரியமிக்க பொருட்களை வைப்பதன் மூலம் இன்னும் பயனுள்ளதாக மிளிரச் செய்யலாம்.

இது தவிர இதன் முன்னாலேயே திருவாசக அரண்மனை என அழைக்கப்படும் 108 சிவலிங்கங்கக்ள் கொண்ட வேறுபட்ட கோவில் அமைப்பு ஒன்றும் உள்ளது.இங்கு நடராஜர்,தட்ஷணாமூர்த்தி,நவக்கிரகங்கள் என்பன அமையப் பெற்றுள்ளன.வித்தியாசமான சூழலில் இதனை நீங்கள் உணருவீர்கள்.யாழ்ப்பாணத்தில் சென்று பார்க்கக்கூடிய இடங்களில் தற்போது இதுவும் ஒன்றாகும்.