Jaffna

Jaffna Bird Sanctuary பறவைகள் சரணாலயம்

யாழ்ப்பாணம் பெனிசுலா பகுதியைச் சுற்றிலும் காணப்படும் அழகான கடல் நீரேரிப் பகுதிகள் யாவுமே பெருந்தொகையான பறவைகள் காணப்படும் இடமாகும்.அந்தவகையில் யாழில் இருந்து பண்ணைப் பாலம் வழியாகச் செல்லும் மண்டைதீவு, வேலணைப் பகுதிகளில் பெருந்தொகையான பறவைகள் காணப்படும் பறவைகள் சரணாலயம் ஆகும்.

காலை வேளைகளிலும் பிற்பகல் வேளைகளிலும் அதிகளவான பறவைகளைக் காணக்கூடியதாக இருக்கும்.உப்பு நீர் பெருமளவில் தேங்கி நிற்கும் கண்டல் சாகிய தொகுதிகளில் காணப்படும் சதுப்பு நிலம் ஏராளமான பறவைகளிற்கேற்ற உணவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.இங்கு விளைந்திருக்கும் சிப்பிகள்,இறால்,பிளான்தன்கள்,நண்டுகள்,சிறியவகை மீன்கள் என டிசம்பர் இன் பின்பு மழை தேங்கி நிற்கும் காலங்களில் பறவைகளிற்கேற்ற உணவுகள் சிறப்பாகக் காணப்படுகின்றன.இதனை உண்பதற்காக ஏராளமான பறவைகள் வந்து செல்கின்ற இடமாக இவை அமைந்துள்ளன.யூலை,ஆகஸ்ட் வரை காணப்படும் செழிப்படைந்த கடலுணவுகள் மற்றும் இங்கு நிலவும் காலநிலை காரணமாக வேறு பல நாடுகளில் இருந்தும் வேடந்தாங்கல் பறவைகளும் வந்து செல்கின்றன.

நம் நாட்டு இனங்களான பலவகைக் கொக்கினங்கள் (வெள்ளை,சாம்பல்,கருமை நிறமான கொக்குகள் கரண்டிவாயன்,செங்கால் நாரா,கூ ழைக்கடா,விசிலின் வாத்துக்கள்,கடற்புறா,கடல் கழுகு,செங்கால் புளினி ,கடல்காகம்) என இன்னும் பல எண்ணற்றபறவைகளைக் காணலாம்.இவை தவிர கண்டல் சாக்கியத்திற்குரிய கண்டல்,பெருங்கண்டல்,அவிஸீனியா,சொன்னாராட்டிய,புருகுகிற,ஸ்கைரோபோர போன்றதாவரங்களையும் அவற்றின் மூச்சுவேர், சீவசமுளைத்தல் போன்ற தாவரப் பண்புகளையும் காணலாம்.

இவ்விடம் bird watching இடமாக இருப்பதை விடவும் மனதை நெகிச்சியடையச் செய்யும் ஓர் இடமாக உள்ளது.படப் பிடிப்புக் கலைஞர்கள் மட்டுமல்லாது மாணவர்களிற்கு சிறந்த கற்றல் சூழலை வழங்குகின்றது.யாழ்ப்பாணத்தில் சென்று பார்க்கக் கூடிய இயற்கை அரண்களில் இதுவும் ஒன்றாகும்.