Temple

பொன்னம்பல வாணேஸ்வரம் | Ponnambalawaneswaram Kovil

மிகவும் சரித்திர புகழ் வாய்ந்த கொழும்பு மாவட்டத்திலுள்ள கொச்சிக்கடையில் அமைந்துள்ள கோயிலில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆகும். இது 1856 ஆம் ஆண்டு மானிப்பாயில் இருந்து கொழும்பு செட்டி தெருவில் வாழ்ந்த பொன்னம்பல முதலியார் அவர்களால் கட்டப்பட்டது.

விஜயநகர கட்டடக் கலையை கொண்ட இக்கோயில் முழுக்க முழுக்க கருங்கல்லால் அமையப்பெற்றமை இதன் சிறப்பம்சமாகும். பொன்னம்பல முதலியார் அவர்களின் மறைவுக்குப் பின்பு அவரின் மகனான சேர் பொன் ராமநாதன் இக்கோவில் கட்டப்பட்டு வந்தது.

1912ஆம் ஆண்டு இக்கோயில் முதன் முதலாக திருமுழுக்கு செய்யப்பட்டது. இக் கோயிலின் தூண்கள் சிலைகள் கூரைகள் யாவுமே கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அமைப்பதற்காக கருங்கற்கள் இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்டது.இக்கோயில் கோபுரம் கட்டி முடிப்பதற்கு முன்பாகவே சேர் பொன் ராமநாதன் அவர்கள் காலமாகிவிட்டார் அதனை தொடர்ந்து அவர்களின் சந்ததியினர் ஆல் நிதிப்பற்றாக்குறை காரணமாக சீமெந்தின் மூலமே அமைக்கப்பட்ட கோபுரமே உருவாக்கப்பட்டது.இதுவும் நிறங்கள் பூசாமல் கருங்கல்லின் தோற்றத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் பொன்னம்பலவாணேஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் வீற்றிருக்கிறார் மூர்த்தி தலம் தீர்த்தம் என்பவற்றை ஒருங்கே அமையப்பெற்ற ஒரு கோவிலாகும். பரிவார தெய்வங்களாக விஷ்ணு, பிள்ளையார், நடராஜர், சோமாஸ்கந்தர், சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர் நவக்கிரகம் ஆகியன உள்ளன.

வெளிவீதியில் நர்த்தன கணபதி, மாரியம்மன், ஆகியோருடன் ஆஞ்சநேயர், முனியப்பன் ஆகியோருக்கு தனித்தனியான சிறிய சன்னி தானங்கள் காணப்படுகின்றது. ஆலய மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பங்குனி உத்திரத்தன்று தேர் திருவிழாவுடன் நிறைவடைகின்றது. மூன்று வேளை பூஜைகளும் காணப்படும், இக்கோயிலில் வலம் வருதல், பூஜை செய்தல் என்பன உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு மிகுந்த நிம்மதியையும் தருகிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதனை நீங்கள் இக்கோயிலினுள் செல்லும்போது அதன் பரிசம் மூலம் உணர்ந்து கொள்வீர்கள்.