Jaffna

Mathagal Fish Market மாதகல்

யாழ்ப்பாணத்திலிருந்து 16km தொலைவில் காணப்படும் மீன்பிடிக் கிராமமே மாதகல் ஆகும்.இது கடல் சூழ்ந்த அழகான வனப்பு மிக்க சூழலில் அமைந்துள்ளது.போர்க்கால சூழ் நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட சூழலில் இன்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.ஜம்புகோளப்பட்டினம்,ஜம்ப்புநாதேஸ்வரர் என புகழ்பெற்ற பல விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாதகல் மீன்பிடியில் சிறந்து விளங்குகின்றது.500 இற்கும் மேற்படட விசைப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகின்றது.இவை உடன் மீன்கள் என்பதால் நல்ல தரமானவையாகவும் சுவையானவையாகவும் காணப்படுகின்றன.

பாரை, விளை, கொடுவால், சுறா, கணவாய்,நண்டு, சீலா என எண்ணற்ற மீனினங்கள் காணப்படுகின்றன.காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை படகுகளில் வாவி வீடுகளிலும் மீன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.இவ்வாறான குறுகிய நேரேத்தினுள்ளேயே மீன்கள் யாவும் முடிவடைந்துவிடும்.இதனை தனி நபர்கள் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.மோட்டார் வாகனங்களில் சிறிய வடி வாகனங்களில் மொத்த வியாபாரிகள் இதனைப் பெற்றுக் கொள்கின்றனர். இது தவிர அருகிலுள்ள மீன் சந்தையிலும் இம் மீன்கள் வியாபாரிகளால் வாங்கப்பட்டு கூறுகளாக ஏல விற்பனை செய்யப்படுகின்றது.

இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீன்பிடியுடன் இணைந்ததாகவே உள்ளது. கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்திலிருந்து வீதிக்கு சமாந்தரமாகச் செல்லும் கடற்கரை உசுமாந்துறை இன்னும் இடத்திலும் வள்ளங்கள் படகுகள் மூலம் மீன்பிடித்தலும் அங்கு காணப்படும் சந்தையொன்றில் மொத்த விற்பனையும் நடைபெறுகின்றது.அழகான மீன்பிடிக்கிராமம் ஒன்றை கண்டு அங்கு நேரடியான அனுபவங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் நெய்தல் நிலமக்களின் இயல்பு வாழ்க்கையை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.அழகான காலை நேர கடற்கரைச் சுழலை மீன்வாசனையுடன் அனுபவித்துத்தான் பாருங்களேன்.