Sri Lanka

மீன் மகள் பாடுகிறாள் | வாவி மகள் ஆடுகிறாள் | மட்டுநகர் அழகான ஊரம்மா

நமது இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் தனித் தமிழர்கள் வாழும் இடமாக இருப்பது வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஆகும். இருப்பினும் கிழக்குப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்களவரும் வாழ்கின்றனர். உதாரணமாக அம்பாரையில் உள்ள பானமைப் பிரதேசத்தைக் குறிப்பிடலாம். மட்டக்களப்பின் பல பாகங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிக அளவிலேயே வாழ்கின்றனர். உதாரணமாக களுவாஞ்சிக்குடி காத்தான்குடி கல்முனை ஏறாவூர் போன்ற சில பகுதிகளை குறிப்பிடலாம். இருப்பினும் மீன்பாடும் ஊரான நம் தமிழ் தேசம் மட்டக்களப்பை பற்றி உங்களுக்கு இதில் சற்றுக் கூறலாம் என்று நினைக்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழகமாக செங்கலடி கிழக்குப் பல்கலைக் கழகத்தையும், விபுலானந்தாக் கல்லூரி என்னும் இசை கல்லூரியையும் கற்றலுக்கான அடையாளங்களாக கிழக்கு கொண்டிருக்கின்றது. நகர்ப்புறத்தில் இருமருங்கிலும் பல கடைகளை கொண்டு அமைந்துள்ள நகரப்புற பகுதியானது நகரத்தின் மத்தியிலேயே காந்தி பூங்கா எண்ணம் ஒரு பூங்காவை கொண்டுள்ளது. இதன் நுழைவாயில் எனக் குறிப்பிடப்படும் இடமும் காந்தி பூங்காவில் அமைந்துள்ளது. அது தவிர இங்கு காணக் கூடிய இடங்களாக இருப்பது மட்டக்களப்பு கோட்டை பகுதி மாமாங்கப் பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் போன்றவை மிகச் சிறப்பு மிக்கதாகும். கல்லடி பாலத்தின் மீது நாம் உலாப்போதல் என்பது மிகுந்த மனச் சுமையை நீக்கி பறவையாக பறக்கும் எண்ணத்தை மனதில் தோற்றுவிக்கும் ஓர் இதமான இடமாகும்.

மட்டக்களப்பின் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தீம் பார்க் எனப்படும் ஓர் பூங்கா பல விலங்குகளை காட்சியாக கொண்டுள்ளது. அவ்விடத்திற்கு நீங்கள் படகு மூலம் சென்றடையலாம் ஒரு தீவு சென்றது போல் வித்தியாசமான அனுபவத்தை உணர்வீர்கள்.அதுதவிர இங்கே சிறந்த கடல் உணவு வளம் காணப்படுகின்றது. உடன் மீன்கள் மற்ற நண்டு இறால் போன்ற உணவுகளை சுவைப்பதற்கு ஓர் அருமையான இடமாகும்.

மட்டக்களப்பின் நகர்ப்புறப் பகுதியில் சுவையான தரமான உணவு கடைகளையும் தங்கி நிற்கும் விடுதிகளையும் நான் இதில் குறிப்பிடுகின்றேன். நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். அது தவிர பாசிக்குடா பகுதியில் அதிகளவான தங்குமிட விடுதிகள் பல வசதிகளுடன் காணப்படுகிறது. இருப்பினும் அந்த இடம் ஒரு வறண்ட இடமாகவே காட்சியளிக்கிறது. ஒப்பிடுகையில் மட்டக்களப்பு நகர்ப்பகுதி ஆயிரம் மடங்கு மேலானது. நீங்கள் உங்கள் பொழுதுபோக்குகளை கழிப்பதற்காக உலாச் செல்லும்போது செல்ல வேண்டிய இடம் மட்டகளப்பு ஆகும். இங்கு சுவையான தரமிக்க கடல் உணவுகளை உண்பது டன் உப்புக் காற்றையும் இயன்றளவு உள்ளெடுக்கலாம்.

மீன்கள் வாவியில் துள்ளி விழுவதால் மீன்பாடும் ஊர் என்று குறிப்பிடுவர். அத்துடன் விபுலானந்த அடிகள் பிறந்த இடம் என்ற சிறப்பையும் மட்டகளப்பு தன்னகத்தே பெற்றுக் கொள்கின்றது.