Colombo Temple

மோதறை மகா காளியம்மன் மோதறை சித்தி விநாயகர் ஆலயம் Mothara Mahakaliyaman

முகத்துவாரம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மூன்று கோவில்கள் முகத்துவாரம் சிவன் கோயில், முகத்துவாரம் சித்திவிநாயகர் ஆலயம், முகத்துவாரம் காளியம்மன் கோயில் என்பனவாகும். அவற்றினை அடுத்து இன்னும் ஓர் கோயில் காணப்படுகின்றது. அது முகத்துவாரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள முகத்துவாரம் விஷ்ணு கோயில் ஆகும். சித்தி விநாயகர் கோயிலின் உள்ளேயே காளிக்கான பகுதி அமைந்துள்ளது. இருப்பினும் முகத்துவாரம் காளியம்மன் கோயில் என குறிப்பிடப்படுவது பக்தர்கள் மீது அம்மனின் ஈடு இணையற்ற கருணையே காட்டுகின்றது.

காளியம்மன் கோயில் பகுதியை சூழல் மாலைகள் விற்குமிடம் பல தட்டுகள் விற்குமிடம் அர்ச்சனை பொருட்கள் விற்குமிடம் என்பன காணப்படுகின்றன பெண்கள் ஊர்களின் தமிழ்ப் பிரதேசங்கள் மாதிரி அல்லாது சிங்கள மக்களும் காளி அம்மனின் அருளைப் பெறுவதற்காக கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணமே உள்ளனர்.

இங்கு காணப்படும் சரியா மாலைகள் ரூபா 100 ஆகவும் பெரிய மாலைகள் 200 ரூபா வரையும் காணப்படுகின்றது அதேபோல் பல தட்டுகளும் சிறிய தட்டு 400 ரூபாயாகவும் அதிக பழ ங்கள் நிரம்பிய பெரிய தட்டு 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மூன்று கால வேளை பூசைகளும் நடைபெறும் இவ்விடம் காலை முதல் பிற்பகல் வரை அனேகமான நாட்களில் திறந்திருக்கும். அழகான சிற்ப வேலைகளுடன் அமைந்த சித்தி விநாயகர் ஆலயத்தின் உட்பிரகாரம் பார்ப்பதற்கு மிகவும் அழகானது. முகத்துவாரம் சிவன் கோயிலில் அமைந்துள்ள சாதம்பரி அம்மனின் சன்மானமும் மிகவும் பெரிய கருங்கல் சிலையாக தேசிக்காய் மாலைகளுடன் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அத்துடன் அருணாச்சலேஸ்வராய என்று குறிப்பிடப்படும் சிவனின் காட்சியும், பத்மநாப பெருமாள் எனக் குறிப்பிடப்படும் அனந்தசயனனின் காட்சியும் மிக ரம்மியமான வை.இக்கோயில்களில் தரிசிக்கும்போது மனதில் உண்டாகும் பக்தி பிரவாக அமைதி நிலையும் ஒவ்வொருவரும் செல்லும்போதே உணர்ந்துகொள்ளலாம்.