Jaffna

யாழில் சுருட்டு சிறு கைத்தொழில் | அருகிவரும் சுருட்டு உற்பத்தி

மண்ணை பதப்படுத்திய பின்பு புகையிலைக்கான நாற்றுக்கள் போடப்படுகின்றன. நாற்றுக்களை தூவ முன்பாக குழை பரவி எரு இட்டு அதன் பின்பே நாற்றுகள் நடப்படுகின்றன. எறும்புகள் போன்றவற்றில் இருந்து விதையின் சேதத்தை குறைப்பதற்காக அதற்குரிய மருந்தும் இடப்படுகின்றது.

எட்டு நாட்களுக்குள் சிறிய வெடிப்பு மாதிரி உருவாகி ஒரு மாதத்திற்குள் கன்றுகள் நன்கு வளர தொடங்கிவிடும். இதன்பின்பு நாற்று மேடையில் இருந்து கன்றுகள் பிடுங்கப்பட்டு சாதாரண இடத்தில் நாட்டப் படுகின்றது. காலை வேளைகளில் நீர் ஊற்றுவது சிறந்த ஒரு முறையாகும்.

ஐந்து அல்லது ஆறு தடவைகள் கெட்டு உடைக்கப்படுகின்றது. இவை மண்ணுக்குள்ளே இவற்றுக்கு உரமாகின்றன. அதற்கு ஐந்து அல்லது ஆறு வாரம் செல்கின்றது இதன் பின்பு புகையிலைக் கன்றுகள் அறுவடை செய்யப்படுகின்றன.வெயிலில் காய விடப்படும் புகை இலைகள் பின்பு கிடங்கு ஒன்றில் அவியலுக்கு விடப்படுகின்றன.

தெரிவு,சீவல் ,கழிவு என்பன பிரிக்கப்பட்டு ஐந்து அல்லது ஆறு கொண்ட கட்டுகளாக காய விடப்படுகின்றது. ஐந்து அல்லது ஆறு நாட்களில் பிரட்டிப் பிரட்டி விடப்பட்ட நிலையில் கொட்டில் உட் காணப்படும் கயிறுகளில் இவை காய விடப்படுகின்றது. பாடமாக அடுக்கப்படும் புகையிலை பங்கசு எதுவும் பிடிக்காத நிலையில் கவனமாக காயவிட படுவதற்காக ஒன்றுவிட்ட ஒரு நாளுக்கு நாட்களுக்கு புரட்டப்படுகின்றது.

இவ்வாறு நன்கு காய விடப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட புகையிலையினால் புகையிலை தூள்கள் வைத்து சுற்றப்பட்டு சுருட்டு என்னும் வடிவில் ஆக்கப்படுகின்றது. இதுவே புகை இலையில் சுருட்டு செய்யும் முறையாகும். இது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் செய்யப்படுகின்றது குறிப்பாக இணுவில், புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய், ஊரெழு, வேலணை போன்ற தீவுப் பகுதிகளிலும் இது சிறப்பாக காணப்படுகின்றது. என்று இது ஓர் அருகிவரும் சிறு குடிசை கைத்தொழில் ஆக உள்ள நிலையிலும் கூட நமது ஊர்களில் இவை பே ணப்படுவது மிகவும் சிறப்புமிக்கதே.

நாம் எமது இலங்கை நாட்டில் காணப்படும் ஒரு கைத்தொழில் ஆகிய புகையிலையில் இருந்து சுருட்டு தயாரித்தல் இலங்கையின் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் காணக்கூடியதாக உள்ளது. நீங்கள் நேரில் சென்று காணக்கூடிய ஒரு சிறு கைத்தொழில் ஆகும்.