Colombo

நீர்கொழும்பில் இவ்வளவு பெரிய கருவாட்டு உற்பத்தியா?

நீர் நிலைகள் நிரம்பிய அழகிய நீர்கொழும்பு இலங்கையிலுள்ள அனைத்து இடங்களிலுமே மேலான கருவாடு உற்பத்தியை கொண்டுள்ளது. இங்கு உள்ள குட்டி தீவு என்னுமிடத்தில் மீன் சந்தை தொகுதிக்கு பின்புறமாக கடற்கரை ஓரமாக நான்கு ஏக்கர் பரப்பளவில் பல வகையான கருவாடுகள் காயவிடப்படுகின்றன. இரண்டு தினங்களுக்கு பெரிய பரல்களில் அதிகளவான உப்பு சேர்த்த பாட்டு மீன்கள் ஊற விடப்படுகின்றது. பின்பு நன்கு வெயில் படக்கூடிய வாறு சாக்காக பின்னப்பட்ட விரிப்புகளில் காய விடப்படுகின்றது.

இங்கு பல வகையான மீன்களும் காணப்படுகின்றது. பெயர்களைக் குறிப்பிடுவதானால் சூரை, தளபத்,பாரை, திருக்கை,கோழிமீன்,சாளை போன்றவை கருவாட்டுக்கிற்காக காய விடப்படுகின்றன. நீர்கொழும்பில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மலிவான விலைக்கு கருவாடுகள் பெறக்கூடியதாக இருக்கும் விலை கூடிய கருவாடாக காணப்படுகின்றது மிகவும் ருசியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நீங்கள் செல்லும் வேளைகளில் இங்கு கருவாடுகள் வாங்கிச் செல்வது என்பது மிகப் பொருத்தமான ஒன்றாகும்.