Colombo

Bandaranaike International Airport

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்.இது கட்டுநாயக்கவில் அமைத்துள்ளது. இலங்கையில் காணப் படுகின்ற மிக்ப்பெரிய விமான நிலையமாகும். கொழும்பிலிருந்து 55km தொலைவிலுள்ளது. கொட்டவாவிலிலிருந்து வெளியேறும் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக போக்குவரத்து நெரிசலைக் குறைத்து செல்லக் கூடியதாக இருக்கும். இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் றோயல் படை வீரர்களின் வானுர்தி தளமாகவே இது காணப்பட்டது. 1970 இல் பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டார நாயக்க பன்னாட்டு வானுர்தி விமான நிலையம் எனப் பெயர் பெற்றது.1977 இல் கட்டுநாயக்க விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.பின்னர் 1994 ம் ஆண்டிலிருந்து இன்றளவும் பண்டாரநாயக்க விமான நிலையம் என்றே அழைக்கப்பட்டது. மொத்தமாக 29 நிறுத்து தளங்களைக் கொண்டது. 15- 20 வரையான முனையங்களைக் கொண்டுள்ளது.இது தவிர பல ஓடுபாதைகளையும் கொண்டுள்ளது. 35 இற்கும் மேற்பட்ட சர்வதேச விமானசேவைகள் உள்ளடங்கலாக உள்ளது.

சர்வதே விமான நிலையத்தினுள் பல deuty free shops காணப்படுகிறது.இங்கு அனைத்து வகையான பல பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.pizza cut, burger, KFC முதலான பல உணவு நிலையங்கள் காணப்படுகின்றன.இதனை பிரயாணத்தின் முன்பு நீங்கள் உங்களிற்கு தேவையாயின் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.