Colombo

Crow Island Beach Park | முகத்துவாரம் காக்கா தீவுப் பூங்கா

மோதர என அழைக்கப்படும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் காணப்படுவதே காக்கா தீவு எனப்படும் crow island ஆகும். இது இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் ஒரு சிறிய தீவாகவே படகில் செல்ல வேண்டியதாக இருந்துள்ளது. இருப்பினும் இப்போது அழகான ஒரு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு பல கொலைகள் நடந்து சடலங்கள் வெட்டி வீசப்படும் ஒரு மர்மத் தீவாக இருந்த இவ்விடம் இப்போது பூங்காவாக புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. அரசாங்கத்தின் நல்ல நோக்கினால் இவ்விடம் இவ்வாறான ஒரு பூங்காவாக மாறியுள்ளது ஒரு அரிய செயலாகும்.

இங்கு இப்போது நோக்கினால் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற ஊஞ்சல், சறுக்கல், கயிற்றுக் கட்டுமானம் போன்ற பல விளையாட்டு உபகரணங்களை கொண்டுள்ள அதே வேளையில் சிறிய சிறிய உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளும் உண்டு கடற்கரை ஓரமாக உலாவி வருவதற்கு நடைபாதை தொகுதிகளையும் இருப்பதற்கு கல்லாலான ஆசனங்களையும் நீங்கள் காணலாம்.

எல்லா நாட்களிலும் 24 மணி நேரங்களிலும் நீங்கள் டிக்கெட் எடுக்காது இலவசமாக சென்று வரக் கூடிய ஓர் அரிய இடமாகும். இங்கு நின்று பார்க்கும்போது கொழும்பு கப்பல் துறைமுகத்தில் களஞ்சியப் பகுதிகளையும் தாமரைக் கோபுரம் போன்ற பகுதியையும் நோக்கலாம்.

புறக்கோட்டை பகுதி அல்லது கொச்சிக்கடைப் பகுதி கொட்டகேனா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போது இவ்விடத்திற்கு சென்று வருவது மிகவும் இலகுவானதாக இருக்கும். மாற்றம் ஒன்றே நிலையானது என்பதற்கு அமைய நீங்கள் சென்று பார்த்து மகிழ வேண்டிய ஒரு பகுதியாக இது இருக்கின்றது. சிறுவர்களுக்கு விளையாடுவதற்கும் பொழுதுபோக்கிற்கும் ஏற்ற பகுதியாக இருப்பதுடன் பெரியவர்கள் தமது வேலை நேரங்களில் இருந்து விலகிக் கொள்ளவும், மனதை இலகுவாக்கும், உப்புக் காற்றை சுவாசிக்கவும், சிறந்த பகுதியாக இது திகழ்கின்றது.