Colombo

Hamilton Canal | ஹமில்டன் கால்வாய் | இலங்கையின் டச்சுக் கால்வாய்

அனைவருக்கும் சாரலின் இனிய வணக்கங்கள்🙏🙏🙏
இன்றைய காணொளியில் இலங்கையில் டச்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட கால்வாயை காணலாம். 14.5Km நீளமான இக்கால்வாய் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு வரை நீண்டு காணப்படுகின்றது.1802 இல் பிரிட்டிஷ்காரர்கள் அமைக்கப்பட்ட இக்கால்வாய் முத்துராஜவெல ஈர நிலத்தில் இருந்து உப்பு நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அதுதவிர அன்றைய காலத்தில் வருவாயையும் வருமானத்தையும் ஈட்டித் தரும் ஓர் வணிக நிலையமாக விளங்கியது. ஆனால் இன்றைய நாட்களில் மீன்பிடிப் படகுகள் சென்று வரும் கால்வாய் ஆகவும் அவை தங்குமிடமாகவுமே காணப்படுகின்றது.
நீங்கள் நிச்சயமாக புதிய இடத்தை பார்த்து ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் கருத்துகளில் தெரிவித்து என்னை மென்மேலும் ஊக்குவியுங்கள்.

நன்றி என்றும் உங்கள் இனிய சாரல்🙏🙏🙏