Sri Lanka

Idalgashinna – இதல்கஸ்ஹின்ன

இது ஒரு அழகு கொழிக்கும் மலைக்கிராமம்.வானைத்தொடும் மலை முகடுகளும் அவற்றில் தவழ்ந்து விளையாடும் முகில்களும் இயற்கையின் வனப்புகளாகும்.இவ்விடத்தை நோக்குவோமானால் இது பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை மலைத்தொடர்ச்சியில் காணப்படுகின்றது.கடல் மட்டத்திலிருந்து 1615m உயரத்தில் உள்ளது.இதன் பயணப்பாதை மிகவும் அழகான பல கதைகளை கூறுகின்றது.இவ் பயணத்தை ரயில் மூலம் சென்றடைய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை செல்லும் புகைவண்டியை தெரிவு செய்ய வேண்டும்.இப் பயணம் பத்து மணித்தியாலங்களும் நாற்பத்தெட்டு நிமிடங்களும் ஆகும்.

புகை வண்டியில் செல்லும் மலை நாட்டுப் பயணமென்பது மிகவும் இரசனை மிக்கது.மலை முகடுகள்,பள்ளத்தாக்குகள் எங்கு திரும்பினும் பச்சைப் பசேல் எனக்காட்சியளிக்கும் தேயிலைத் தோட்ட்ங்கள்,இறப்பர்த்தோட்டங்கள் பசுமைப்புரட்சியே.அப்பப்பா வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத அளவிற்கு கொழித்திடும் அழகு.பாம்பென நெளிந்து வளைந்து செல்லும் ரயில் என மலை நாட்டின் அழகை நீங்கள் கண்டியிலிருந்து உணரத் தொடங்குவீர்கள்.

நீண்டு செல்லும் புகையிரதப் பயணம் சலிக்காமல் இயற்கை அன்னையின் எழிலை எடுத்தியம்புவதாக உள்ளது.குறுகிய இடத்தினுள் அதிக சுரங்கப் பாதைகளை கொண்டதாக ஓர் அதிசய பூமியாக இது விளங்குகின்றது.இதழ்கசின-ஒஹிய புகையிரத நிலையங்களிற்கிடையில் பதினான்கு குகைகளைக் காணலாம்.குகைளினுள் சென்று அதன் வேறுபட்ட இருளான அழகை நீங்கள் இரங்கி நடந்து சென்று காணலாம்.இதன்போது மிக அவதானமாக இருக்க வேண்டும்.ரயில் வரும் நேரத்தை புகையிரத நிலையத்தில் கேட்ட பின் நீங்கள் அவற்றினை நடந்து சென்று காணலாம். மின்சூள்( tochlight )இருத்தல் விஷப் பிராணிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இங்கு காணும் சூரியோதயக் காட்சிகள் மிகமிக அழகானது.மனதிற்கு புத்துணர்வு ஊட்டுவது.சூரியோதயத்தின் முழுமையான அழகைக்காண,கண்டுகளிக்கக் கூடிய ஓர் அறிய சந்தர்ப்பம் ஆகும்.கவிதை வரிகள் உங்கள் மனதில் கிளர்ந்தெழும்.உங்களையும் ஒரு கவிஞனாக்கும் இயற்க்கை.பறவைகளின் இனிய ஒலி,வெளிப் பனி மலைகளினுடே மெல்லக் கிளம்பும் சூரியஒளி,செவ்வானம்,கலைந்து செல்லும் பனிப்புகார்என சொல்ல வார்த்தைகளை தொலைத்து விட்டு தேடுவோம். வானை முட்டும் பைன் மரங்கள்,யூக்கலிப்ராஸ் மரங்கள் தாய்ப் பாறையிலிருந்து வரும் புரளும் பாரைக் குழந்தைகள் வேறோர் சொர்க்க புரிக்கே உங்களை இட்டுச் செல்கின்றது. இங்குள்ள பணனியை வேறுபட்ட நிலைகளில் உணரலாம்.மென் பனி,மூடு பனி,உறை பனி என்பவற்றை இதமாக நடுங்கிக் கொண்டே ரசிக்கலாம்.

சூரிய உதய காட்சியை இராசுத்த நீங்கள் நிச்சயமாக சூரிய அஸ்த்மனத்தையும் மலை முகடுகளுடாக ரசிக்கத் தவறாதீர்கள்.இங்கு பி.ப 2மணியளவிலேயே சூரியன் மேற்கு வானம் நோக்கி விரைவாக செல்லாத தொடக்கி விடுவான்.பி.ப 4 மணியளவில் ஊரின் ஒரு பகுதி வெளிச்சம் ஆகவும் மறு பகுதி இருட்டாகவும் மாறத்தொடங்கியிருக்கும். பனிச்சாரல் பொழியவும் தொடக்கி இருக்கும்.

நீங்கள் தங்கி நின்று பார்ப்பதற்கு ஏற்ற இடங்கள் மிக்க குறைவாகவே உள்ளன.இருப்பினும் தங்கி நின்று காண்பதுவே பொருத்தமானது.இங்கு பங்களா வகை இடங்களே 4/5 காணப்படுகின்றது.பயணத்தின் போது நாம் தங்கிய இடம் peak rest ஆகும்.இவ்விடத்தில் 15 பேர் அளவில் தங்கக்கூடிய இடமாகும்.சமையல்காரர் இருக்கிறார்கள்.கொண்டு செல்லும் உணவுகளை இவர்களைக் கொண்டு சமைத்து உண்ணக் கூடியதாக இருக்கும்.

இதள் ஹசின்ன செல்லும் ரயில் நேரங்களாக
5.55am -2.10pm பொடிமினிக்கே
8.30am -4.10pm உடரட்டமினிக்கே
9.45am -5.15pm 1007express
8.00pm 4.00am night mail