Jaffna

Jaffna Hindu College Pongal 2020

யாழ் இந்தக் கல்லூரி தனக்கேயுரித்தான பல பாரம் பரியங்களையும் கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள முதன்மைக் கல்லூரி ஆகும். அந்தவகையில் பல பாரம்பரிய நிகழ்வுகளையும் கலை விழாக்களையும் நிகழ்த்தி வருவது நீங்கள் யாவரும் அறிந்த உண்மையே. அவ்வாறான ஓர் சிறப்பு மிக்க நிகழ்வே தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா ஆகும்.அதனை இந்துவின் பழைய மாணவர்கள் சிலர் ஒருமித்து தங்களின் ஒன்றிணைந்த முயற்சியில் மிகச் சிறப்பாக ஐந்தாண்டு காலமாக நடாத்திச் செல்கின்றனர்.தொடர்ந்தும் இனிவரும் காலங்களிலும் பொங்கலன்று இந் நிகழ்வு தொடரவுள்ளது.

இதன் போது புதிதாக அமைக்கப் பட சிவலிங்க நாதரிற்கு பூசை முடிந்து பொங்கலும் நடாத்தப்படுகின்றது.இதனையடுத்து ஊர்வலமாக யாழ் நகரை நோக்கிய பயணம் தொடங்குகின்றது. ஒயிலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம் என்பவற்றுடன் பறையொலி முழங்க அதன் இசைக்கேற்பவே தாளங்களுடன் பவனி நகரும். அது மட்டுமல்லாது தீப்பந்தம் சுழற்றல்,சுருள்வாள் வீச்சு,கோடரி கேடய யுத்தம் என்பன பயிற்றுவிப்பாளர் ஒருவரால் மாணவர்களிற்கு பயிறுவிக்கப்பட்டு பவனியில் அரங்கேற்றப்படுகின்றது.யாழ் பேருந்து நிலையம் வரை காங்கேசன்துறை வீதியால் சென்று மீண்டும் திரும்பி வருவார்கள்.இதன் போது காங்கேயம் காளைகள் பூட்டிய மாட்டு வண்டி சவாரியும் இடம் பெறுகின்றது.அத்துடன் மட் பானைகளில் தாகசாந்திக்காக மோரும் வழங்கப்படுவதைக் காணலாம்.இதன்போது நிகழ்வுகளில் பங்குகொள்ளும் மாணவர்கள், பழையமாணவர்,நலன் விரும்பிகள் ,குறைந்தளவிலான ஆசிரியர்கள் என்போரே கலந்து கொள்கின்றனர்.

பொங்கலை திருவிழாவாக சிறப்பிக்கும் ஒரேயொரு பாடசாலை என்றவகையில் இவ் நிகழ்வு மிகச் சிறப்பானது.இருப்பினும் பெருந்தொகையான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை என்ற வகையில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.அந்நிலை தவிர்க்கப்பட்டு பெருந்திரளானோர் பங்கு கொள்ளலே இதனை மேலும் மெருகூட்டுவதாக அமையும்.