Sri Lanka

Mannar Bird Sanctuary – மன்னாரின் வாகரை

மன்னாரின் சுற்றுவட்டத்தில் அங்குள்ள களப்பு, கடல் நீரேரி, கண்டல் சாகியங்கள் என்பவற்றில் காணப்படும் பறவை இனங்கள், விலங்குகளை காணக்கூடியதாக உள்ள காலங்கள் டிசம்பர் 15ம் திகதிக்கு பிற்பட் ட கால த்தில் இருந்து ஜூன், ஜூலை வரை ஆகும். இவற்றினை நாம் சென்று காண்பதுடன் புகைப்படங்கள், வீடியோ என்பவற்றையும் எடுக்கலாம்.

மன்னாரில் வாக்கரையில் மழை பெய்து முடிவுறும் காலங்களில் நீர் தேங்கி நிற்கும். இந் நீர் நிலைகளில் செழிப்புற வளர்ந்திருக்கும் மீன்கள், நண்டு, இறால், சிப் பி,தாவரபிளான்தன்கள், என்பவற்றை வேட்டையாடுவதற்காக இங்கு பல பறவைகள் வந்து செல்கின்றன. கொக்குகள், தாரா வகைகள், வாத்து இனங்கள், கடல்புறா, கடல்கழுகு போன்றவற்றை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

வாகரை கடற்பகுதியில் பறவையினங்கள் மட்டுமின்றி நரி, கழுதைஆகிய விலங்குகளையும் காணலாம். காலை நேர கதிரவன் ஒளியில் துயில் தட்டி எழுந்துவிடட எல்லா உயிர்களும் புத்துயிர்ப்பு கொண்டு புதிதாய் பிறந்தது போல் பல்வேறு ஒலிகளில் புது கீதம் பாடுவதுவும் மனதிற்கினிய செவிக்கினிய காட்சிகளாகும்.

பறவைகள், விலங்குகளை அவதானிப்பதற்கு பயன்படுத்தும் ஆடைகளை அணிந்து சென்றால் சூழலை ஒத்த நிறத்தில் அவை அமைந்திருத்தல் சாலப் பொருத்தமானது. விலங்குகளோ பறவைகளோ ஓடி விடாமல் இருப்பதற்கு இது உதவுகின்றது. இதனால் நிதானமாக அவதானிப்பதுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

அந்தி மயங்கி அரிதாரம் பூசும் பொன்மஞ்சள் வானத்திலும் புள்ளினங்களைக் காணவும் அவைகூடு திரும்பும் காட்சிகளை ரசிக்கவும் முடியும். டிசம்பர் பிற பகுதியில் அதிகளவான பறவைகளைக் காணலாம். பூநகரியில் ஊடக மன்னார் செல்லும் கண்டல் சாகியங்களில் செங்கால் நாரைகள், பூநாரைகள் போன்ற வேடந்தாங்கல் பறவைகளை காணலாம். கூடாரங்களை அமைத்து தங்கி கொண்டு செல்லும் உணவுப் பொருட்களை சமைத்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்கலாம்.

கொழும்பிலிருந்து மன்னார் செல்வதற்கான பாதையும், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் செல்வதற்கான பாதையும் இங்குள்ள காணொளியில் குறிக்கப்பட்டுள்ளது.