Colombo

Moratumulla Furniture Shops | இலங்கையில் அமைந்துள்ள மிகப்பிரமாண்ட தளபாடத் தெரு

மொரட்டு முல்லை என்பது மொரட்டுவையில் ஒரு முல்லைப்பகுதி போன்ற இடமாகும். இங்கு டி சொய்சா வீதியில் 3. 5 Km தூரத்திற்கு தளபாடங்கள் நிறைந்த தளபாடத் தெருவாக உள்ளது. இங்கு காணப்படும் தளபாடங்களை செய்வதற்கு வாவியின் ஊடாகவே முன்பு அரி மரங்கள் நீரோட்டத்தின் ஊடாக எடுத்து வரப்பட்டன.

பொதுவாக நாட்டின் பல இடங்களில் இருந்தும் இங்கு அரிய மரங்கள் கொண்டு வரப்படுகின்ற போதும், குருநாகல் பகுதியில் இருந்து தேக்கு மரங்கள் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. டி சொய்சா வீதியில் மட்டுமல்லாது அதன் பக்க கிளைகள் போன்று காணப்படும் ஒழுங்கைககளின் உள்ளோயும்குடிசை கைத்தொழில் போன்று வீட்டில் வைத்தே தளவாடங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அவற்றினை அங்குள்ள தளபாட காட்சியறைகளுக்குக் கொடுப்பதன் மூலமாக அல்லது நேரடியாக மக்களுக்கு விற்பதன் மூலமாக வருவாய் ஈட்டப்படுகின்றது.

எவ்வாறு நோக்கினும் இங்கு நவநாகரீக உலகில் ஆர்பிகோ காட்சியறை, தம்ரோ காட்சியறை என்பவற்றின் விலைகளிலும் பார்க்க மிகவும் விலை குறைவான பொருட்களை பெறக் கூடியதாக இருப்பதுடன் மிகத் தரமானவை ஆகவும் உள்ளது.

நாட்டின் பல பாகத்தில் உள்ளவர்களும் இங்கு வந்து தமக்குப் பொருத்தமான தளபாடங்களை தெரிவு செய்தீர்கள் ஆனால், அவற்றினை வாகனங்களில் உங்கள் வீடுகளுக்கே அனுப்பி வைப்பார்கள். எனவே நீங்கள் பலவர்ண உறுதியான தளவாடங்களை வேண்டுவது ஆனால் மிகவும் பொருத்தமான ஒரு தளபாட தெரிவாக விளங்குவது இந்த டி சொய்சா வீதியில் அமைந்துள்ள மொரட்டுவ முல்லை பகுதியே ஆகும். அதுமட்டுமல்லாது உங்கள் கதிரைகளுக்குத் தேவையான பலவர்ண சேலைகளையும் நீங்கள் தெரிவு செய்து கொடுக்க முடியும். அதற்குரிய கடைகளும் இவ்வீதியில் அமைந்து காணப்படுகின்றன.

ஒரு தடவை சென்று பார்த்து உங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை மனநிறைவுடன் வேண்டிச் செல்லுங்கள்.