Temple

Munneswaram | முன்னேஸ்வரம் | 13ம் நாள் திருவிழா

அனைவருக்கும் சாரலின் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏 இன்றைய காணொளியில் நீங்கள் சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் ஆலயத்தை தரிசிக்க உள்ளீர்கள். முன்னேஸ்வரம் ஆலயம் ஆனது புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பகுதியில் குருணாகல் – சிலாபம் வீதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும். ராமர் வியாசர் போன்றோரால் வணங்கப்பட்டு வந்த இக்கோயில் முன்னே தோன்றியது என்ற பொருளிலேயே முன்னேஸ்வரம் என அழைக்கப்படுகின்றது அதற்கு அன்றைய நாட்களில் அழகேஸ்வரர் என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வரலாற்றையும் திருவிழாக்காலங்களில் சிறப்பையும் நீங்கள் காணொளியில் கண்டு களிக்கலாம்.