Colombo

National Sandalwood Garden 2021 | இலங்கையில் முதன்முறையாக 1200 கன்றுகளைக் கொண்ட சந்தனமரத் தோட்டமா?

இலங்கையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக அமைக்கப்பட்ட புதிய சந்தன மரக் காடுகள் ஜூலை மாதம் 20ஆம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது பெரிய சந்தனமர தோட்டம் ஆகும். இவ்விடம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இங்கு வந்து சந்தனம் செஞ்சந்தனம் உட்பட 1200 மரங்கள் அளவில் காணப்படுகின்றது. சந்தனம் 900 மரங்கள் வரையிலும் செஞ்சந்தனம் 300 மரங்கள் வரையிலும் இங்கு நாட்டப்பட்டு உள்ளது. இவற்றின் பிரதான நோக்கம் மாசடைந்து வரும் வளிமண்டலத்தில் ஒட்சிசன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதே ஆகும் சாதாரணமான மரங்கள் ஒளித்தொகுப்பின் போது விடுவிக்கப் ஒட்சிசனிலும் பார்க்க பத்து மடங்கு ஒட்சிசனை இவை விளைவிக்கக்கூடியவை. எனவே கொழும்பு நகரத்தை தூய்மையாக்கும் பொருட்டு இச் சந்தன மரத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தன மரங்கள் பல மூலிகை இயல்புகளைக் கொண்டுள்ளன. தோலில் பூசும் சோப்புகள், கிரீம் வகைகள் என்பவற்றை செய்வதற்கும் வேறுபல தோல் நிவாரணி,தொழுநோய் போன்றவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாது இவற்றின் கொழுந்து ஆனது சுண்டல் செய்வது இலைக்கஞ்சி போன்றவற்றை உருவாக்குவதற்கும் உதவுகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகள் வாழ்ந்த காலத்தில் இருந்தே மக்களால் சந்தன மரங்கள் நடப்பட்டு வருகின்றன.

இவை எட்டு மீட்டர் வரை வளரக்கூடிய மரங்கள் ஆகும். இவை பெரிய மரங்களாக வளர்வதற்கு முப்பது ஆண்டுகள் வரை தேவைப்படுகின்றது. சிறிய பூக்களை பூக்கும் தாவரம் ஆரம்பத்தில் மஞ்சள் நிறப்பூக்கள் ஆகவும் பின்பு ஊதா கலந்த கபில நிற பூக்களாகவும் மாறுகின்றது.

கொழும்பில் அமைக்கப்பட்ட சந்தனமர தோட்டத்தில் பல அலங்கார நீர் சுழல்களை கொண்ட மதில்களை காணலாம். அவற்றிலிருந்து நீர் வடிந்து செல்வது இரவு நேரங்களில் மிக அழகான காட்சியாகவும் மனதிற்கு புத்துணர்வு ஊட்டுவனவாகவும் உள்ளது. சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைக்கப்பட்டுள்ள இவ்விடத்தில் நடைபாதை ஓரங்களில் நீங்கள் நடந்து செல்லும்போது மரங்கள் வளர்ந்ததன் பின்பு தூய்மையான ஒட்சிசனைப் பெறக்கூடியதாக இருக்கும்.