Colombo

Sri Lanka Pettah Market Spree Cheaper than India | இது எங்கள் பேட்டை|

பெற்றா என்பது கொழும்பின் புறநகர்ப் பகுதியான புறக்கோட்டைப் பகுதியாகும். இங்கு பல சந்தை தொகுதிகளும் கடை தொகுதிகளும் காணப்படுவதுடன் பெற்றாவை இனம் காட்டும் ஜாமி உல் அல்பார் என்னும் சிவப்பு நிறமான மசூதியையும் கான் எனப்படும் மணிக்கூட்டு கோபுரத்தையும் குறிப்பிட்டுக் கூறலாம். அதுமட்டுமல்லாதுபழைய மேனிங் மார்க்கெட் எனக் குறிப்பிடப்படும் பழைய கட்டட வடிவமைப்பில் அமைந்த சந்தைக் கட்டிடத் தொகுதியில் தங்கம் விற்பதற்கான கடலோர வீதிகளில் அமைந்த தங்கம் கடைகள் நிறைந்த பகுதியையும் நீரில் மிதக்கக்கூடிய மிதவைக் கடைகளைக் கொண்ட floting market யும் இங்கு காணலாம். வேறு கொழும்புக்கான பெரிய புகையிரத நிலையத்தையும் பாரிய பஸ் தரிப்பு நிலையங்களையும் குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக இருக்கும்.

இங்கு பல்லின மக்களும் வாழ்கின்றனர். பிரதானமாக மூர் என அழைக்கப்படும் முஸ்லீம் மக்களாலேயே கடைத் தொகுதிகள் பல கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அதுதவிர மலையகத் தமிழர்களும் இங்கு பல வர்த்தக கடைகளை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அது தவிர சிங்களவர்களும் குறிப்பிட்டு கூறக்கூடிய வகையில் வசித்து வருகின்றனர். எனவே பல்லின சமூகங்களையும் கொண்ட ஒரு பகுதியாக புறக்கோட்டைப் பகுதி அமைந்திருப்பதால் எல்லா வகையான சமய வழிபாட்டு இடங்களையும் இங்கு காணலாம்.

மகிழ் ஊர்திகள் தரித்து நிற்பதற்கான அதற்கான தரிப்பிடத்தை இங்கு காணலாம். இது முன்னைய பிரிட்டிஷ் காலத்தில் ரேம் கார் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் தண்டவாளங்களை கொண்டுள்ளது. அவ்விடமே இப்போது பெரிய வாகன தரிப்பிடம் ஆக உள்ளது.இது தவிர மல்வத்தை கடைத்தொகுதி எனப்படும் பகுதியில் சிறுவர்களின் பல விளையாட்டுப் பொருட்களையும் பல வேறு பொருட்களையும் வாங்கக் கூடியதாக இருக்கும். பெற்றா நகரின் பிரதான வீதியில் அனேகமாக புடவை கடைகளே அமைந்துள்ளன.

இங்கு பல குறுக்குத் தெருக்கள் அமைந்துள்ளன. குறுக்கு தெருக்கள் ஒவ்வொன்றும் குறித்த குறித்த பொருட்களை விற்பதற்கென அமைந்து காணப்படுவது இப்பகுதியின் சிறப்பம்சமாகும்.

இங்கு பல மொத்த விற்பனை நிலையங்களும் தனியார் வாங்குவதற்கென சில்லறை விற்பனை நிலையங்களும் அமைந்து காணப்படுகின்றன. காலை வேளைகளில் அல்லது பிற்பகல் வேளைகளில் நாங்கள் பொருட்களை வாங்குவதற்கு நடந்து செல்லும்போது வேறு ஓர் உலகத்தில் நிற்பதாகவே பிரம்மிப்பை தோற்றுவிக்கும். எல்லா தெருக்களிலும் அமைந்துள்ள கடைகளும் கட்டிடங்களும் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு மில்லி மீட்டர் இடைவெளி கூட இல்லாது ஒன்றுடன் ஒன்று தொடர்ந்தது போலவே காணப்படுகின்றது.

பெற்றோரைப் பற்றி நான் இக்கட்டுரையில் கூறிக்கொண்டே செல்லலாம் அவ்வளவு தூரம் மிகவும் பழமையான காலணித்துவ கட்டடங்களையும் கற்களால் அமைக்கப்பட்ட சில குறுக்குத் தெருக்களையும் கொண்டு அமைந்த இவ்விடத்தை நீங்கள் சுற்றி பார்ப்பதே ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக தான் திகழ்கின்றது.