Sri Lanka

Vessagiriya கி. மு 3ம் தமிழ் எழுத்துக்கள்

இலங்கையில் கலாச்சார முக்கோணத்திற்குரிய பண்டைய தலை நகரங்களில் ஒன்றாகிய அனுராதபுரத்தில் இடிபாடுகளின் ஒருபகுதியாக விளங்குகின்ற புத்தவன மடாலயமே வெசகிரியாகும்.

இது ஒரு சுற்றுலாத் தளமாக இருப்பதுடன் வரலாற்றுத் தளம் என்பதே இதன் முக்கியத்துவமாகும்.இது இசுறு முனியவிலிருந்து 1km தூரத்தில் அமைந்துள்ளது. கற்பாறைகளைக் கொண்ட குகைவடிவ அமைப்புகளாகும். இதனை 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த அனுராதபுரத்தை ஆட்சி செய்த நாக இன மன்னனனாகிய தேவநம்பியதீசனாலேயே கட் டப்பட்டதாக கூறப்படுகின்றது. இம் மன்னனின் காலத்தின் பின்பு காசியப்பனால் பேணப்பட்டு வந்ததாகவும் அங்கு ஐந்நூறு துறவிகள் வரை வாழ்ந்ததாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

இவ்விடம் சுற்றிலும் ஆலமரங்கள் நிறைந்த பச்சை போர்த்திய புல்வெளிகளைக் கொண்ட வனப்பு மிக்க சூழலாகும்.இவ் அமைதிமிக்க சூழலில் தமது தவ வாழ்க்கையை மேற்கொள்வதற்காக குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் குழிகளையும் காணும் போது எறும்பு ஊரக் கற்குழியும் என்பது நினைவில் வருகின்றது.இவை தவிர மலை நீர் வழிந்தோடக் கூடிய வகையில் அமைந்துள்ள வடிகால் அமைப்புகளையும் எரிச் செல்லக்கூடிய படிக்கட்டுக்களையும் காணலாம்.

நம் அனைவரையும் சிந்தனையில் ஆழ்த்தி வரலாற்றின் உண்மையை துல்லியமாக காட்டும் காலச்சுவடாக கற்பாறைக்குகைகளில் அமைந்த பண்டைய தமிழ் எழுத்து வடிவமாகிய தமிழி எழுத்துக்களை நாம் காணலாம்.இதுவே நாம் காணக்கூடிய வரலாற்று சிறப்பாகும்.இவ் தமிழி எழுத்துக்கள் கி.மு 3ம்நூற்றாண்டில் வாழ்ந்த இம் மக்கள் பயன்படுத்திய எழுத்து வடிவத்திற்கு சான்றாக உள்ளது.

குகையின் கீழ் நோக்கிச் செல்லும் பகுதியில் சென்றால் அதற்கும் முந்தியதாக உள்ள சித்திர வடிவ எழுத்துக்களைக் காணலாம்.இதிலிருந்து வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திற்குரியது என்பது தெள்ளத்தெளிவான உண்மையாகும்.இதனை நீங்கள் யாழ்ப்பாணம் கொழும்பு செல்லும் வேளையில் இலகுவாக சென்று பார்த்து மகிழக்கூடிய இடமாகும்.